"பாகிஸ்தானிலிருந்து வர்ரேன்..." சென்னை போலீசாரை அதிர வைத்த நபர்...
சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல்துறை போலீசார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக வந்த கார் மற்ற வாகனங்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்றது. அந்த காரை மடக்கி பிடித்த போலீசார், அதிலிருந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் இளைஞர் உத்தரமேரூர் பகுதியை சேர்ந்த ஆல்வின் இன்புட் என்றும் மதுபோதையில் இருந்தார் என தெரிந்ததும், அவரது காரை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவை வரவழைத்து இளைஞரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் விசாரித்த போது எனக்கு ஊரு பாகிஸ்தான், பெயரு கோபாலு என இளைஞர் நக்கலாக பதில் சொல்லும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
Next Story