போதைப்பொருளில் கலப்படம் செய்து விற்ற காவலர் - சென்னையில் கைது..

x

சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்தாவதாக மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்டாம்ப் போதை பொருள் கடத்திய வழக்கில் பாலசுப்பிரமணி என்பவர் கைதான போது, அவருடன் அருண் பாண்டியனுக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்படும் போதை பொருளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எடுத்து செல்லும் போது, சிறுக சிறுக திருடி விற்பனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக போதைப்பொருளில் அஜினமோட்டாவை கலந்து வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்