சென்னையில் பெயர்போன பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் ரூம், ஹாஸ்டல்களில் ஒரே நாளில் ரெய்டில் இறங்கிய1000 போலீசார் உச்சகட்ட பரபரப்பில் தலைநகர்.. அதிர்ச்சி தகவல்கள்.. சிக்கிய மானவர்கள்
சென்னை அருகே பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் 18 பேர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்திற்காக கைதாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது... நடந்தது என்ன?...
படிக்கும் வயதில் புத்தகத்திற்கு பதில் போதைப்பொருளைத் தூக்கியதால் வந்த விளைவு...தங்கும் விடுதி தேடி வந்தது போலீஸ்...தள்ளாடுகிறது எதிர்காலம்...
சென்னை அடுத்த பொத்தேரி பகுதியில் இயங்கி வருகிறது பிரபல தனியார் கல்லூரி...
இங்கு படிக்கும் மாணவர்கள் கல்லூரி விடுதியில் மட்டுமல்லாது...தனியாக வெளி விடுதிகளிலும் வீடெடுத்தும் தங்கி படித்து வருகின்றனர்...
அப்படியாக கல்லூரி மாணவர்களைக் குறி வைத்து போதைப் பொருள் விநியோகம் படு ஜோராக நடந்து வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் பறந்துள்ளது...
இதையடுத்து மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகள், வீடுகள், குடியிருப்புகள் என 500க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர் காவல்துறையினர்...
1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திமுதிமுவென திரண்டதால் பரபரத்துப் போயின பொத்தேரியும் காட்டாங்குளத்தூரும்...
ஒரு பெண் உட்பட 30க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை...
அரை கிலோ கஞ்சா...6 கஞ்சா சாக்லெட்டுகள்...20மிலி கஞ்சா ஆயில்...பாங்கு 5...போதை பானை 1...ஹூக்கா இயந்திரங்கள் 7...ஹுக்கா பவுடர் 6கிலோ...என ஏராளமான போதைப் பொருள்கள் சிக்கின...
கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரபல A+ ரவுடியான செல்வமணி என்பவரைக் கைது செய்து அவரிடம் இருந்து இரண்டே கால் கிலோ கஞ்சா, 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன...
தொடர் விசாரணைக்குப்பின், மொத்தம் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 10 மாணவர்கள், 1 மாணவி உள்ளிட்ட 14-பேரை நீதிமன்றம் அழைத்து சென்றனர். மற்ற 7 மாணவர்களுக்கு காவல் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டது.
அத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 60 இருசக்கர வாகனங்கள்...1 கார் ஆகியவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது...
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சுற்றி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது...
இளம் தலைமுறை...கஞ்சா..மது...என போதையில் தடம் மாறிக் கொண்டிருப்பது பெற்றோர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது...