இளம்பெண் ஆடிய ஆட்டம்.. சென்னையில் இளைஞருக்கு வினையாக மாறிய தியேட்டர் போட்டோ
சென்னை அடுத்த சேலையூர் ஜோயல் கார்டன்ஸ் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். 25 வயதான இவர் சேலையூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, சக பணியாளரான ராயப்பேட்டையை சேர்ந்த லிசியா பகவன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்தநிலையில், ஒருவருக்கொருவர் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் லிசியா குடும்பச் சூழல் காரணமாக அடிக்கடி சாமுவேலிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தன்னை காதலிக்குமாறு அந்த பெண் வற்புறுத்திய நிலையில் சாமுவேல் மறுத்துள்ளார். இதையடுத்து இருவரும் தியேட்டருக்கு சென்றபோது ஒன்றாக எடுத்த புகைப்படங்களை காட்டி, தன்னை சாமுவேல் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக சிட்லப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து ரவுடிகள் மூலமாக தன்னை மிரட்டி ரூபாய் 15 லட்சம் வரை பணம் கேட்பதாகவும் இதற்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாகவும் சாமுவேல் புகார் அளித்துள்ளார்..