செங்கல்பட்டில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி - கதறி அழுத தோழி
சென்னை அடுத்த படூரில், தனியார் கல்லூரி மாணவி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஸ்வினி, தனது தோழியின் அறையில் இரவு முழுவதும் தங்கியிருந்த நிலையில், இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. உடனே, கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில், அஸ்வினி அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story