சென்னை மக்களுக்கு கூடிய விரைவில் வரப்போகும் குட் நியூஸ் | Chennai

x
  • சென்னையில் மழை நீரை சேகரிக்கவும் நிலத்தடி நீரை அதிகரிக்கவும் 41 புதிய குளங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ள நிலையில், அதன் ஒருபகுதியாக வளசரவாக்கம் எஸ்.வி.எஸ் நகரில் ஏழரை ஏக்கர் பரப்பளவில் புதிய சூழலியல் பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது... இப்பூங்காவில் 60 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட புதிய குளம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாகன நிறுத்தம், நடைப்பயிற்சி செய்ய நடைபாதை, உடற்பயிற்சி கூடம், பேட்மிட்டன் கோர்ட், திறந்த வெளி அரங்கம், படகு குழாம், குழந்தைகள் விளையாடும் இடம், பறவைகள் தீவு, ஒப்பனை அறை, நவீன மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளன... இங்கு குளம் அமைப்பதன் மூலம் எஸ்.வி.எஸ் நகர், போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாது என்றும், 15 முதல் 17 சென்டிமீட்டர் வரை பொழியக்கூடிய மழையை சேமிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

Next Story

மேலும் செய்திகள்