சென்னையை உலுக்கிய பல்லாவரம் மரணங்கள்... குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
சென்னையை உலுக்கிய பல்லாவரம் மரணங்கள்... குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 43 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிலும், 10 பேர் ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று, வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீரை குடித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் மழைக்காலங்களில் குடிநீரில் நிறமாற்றம் ஏற்பட்டால் மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் என்றும், உடல் உபாதைகள் ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகளை நாட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.