சென்னையை நோக்கி வந்த பஸ்.. திடீரென வெடித்த டயர் - 45 பயணிகள் கதி என்ன?
நெல்லை அருகே ஆம்னி பஸ்சின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ், வள்ளியூர் அருகே நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சில் பயணம் செய்த 45 பேரும் கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 5 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story