தமிழகத்தின் முதல் மிதக்கும் ஹோட்டல்... எகிறிய எதிர்பார்ப்பு-காத்திருந்த மக்களுக்கு திடீர் ஏமாற்றம்

x

சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக, தமிழகத்தில் முதன்முறையாக முட்டுக்காடு படகு குழாமில் மிதக்கும் உணவு கப்பல் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்நிலையில், மிதக்கும் கப்பலில் தனிநபர் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் படகு சேவை வழங்கப்பட உள்ளதாகவும் தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த படகில் 100 பேர் வரை பயணிக்கும் வசதி உள்ள நிலையில், தற்போது வரை கட்டணம் நிர்ணயிக்கப்படாததால், சுற்றுலா பயணிகளுக்கான சேவை ஒரு மாதத்திற்கு பின் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்