சென்னையில் 30 அடி உயரத்தில் தொங்கி கொண்டே இருக்கும் ஆபத்து - பயந்து பயந்து செல்லும் மக்கள்

x

சென்னை பூந்தமல்லி அருகே உரிய பாதுகாப்பு இன்றி மேற்கொள்ளப்படும் மெட்ரோ பணிகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். குமணன்சாவடி பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ பணியின்போது, கீழே இருந்து 30 அடி உயர பாலத்திற்கு பலகைகள் கொண்டு செல்லப்பட்டது. பலகைகளை கொண்டு செல்லும் கயிறு அறுந்தால் அசம்பாவிதம் நிச்சயம் என்ற சூழல் இருக்கையில், எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கும் சூழல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்