``எங்க மண்ண எங்களுக்கு குடுத்துருங்க''.. ``எங்களுக்கு மீன் அங்காடி வேண்டாம்'' - குமுறும் மீனவர்கள்

x

``எங்க மண்ண எங்களுக்கு குடுத்துருங்க''.. ``எங்களுக்கு மீன் அங்காடி வேண்டாம்'' - குமுறும் மீனவர்கள்

சென்னை மெரினா லூப் சாலையில் 15 கோடி ரூபாயில் 366 கடைகள் கொண்ட மீன் அங்காடி பிரமாண்டமாக கட்டப்பட்டது. இருப்பினும், சமீப நாட்களாக கார் நிறுத்தும் இடத்தில் மீனவர்கள் வியாபாரம் செய்வதாகவும், இதனால் பின்வரிசையில் இருக்கும் மீன் கடைகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சாலை ஓரமாக வியாபாரம் செய்தபோது 260 கடைகள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது 366 கடைகள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வியாபார பிரச்சனையால் நாள்தோறும் உறவினர்களுடன் சண்டையிடும் அவலம் ஏற்படுவதாக குமுறியுள்ளனர். இதனால், மீண்டும் லூப் சாலையில் வியாபாரம் நடத்த அனுமதிக்குமாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்