"அன்று நடந்த தாக்குதலில் சுய நினைவை இழந்தேன்..." விடிந்ததும் மகன்கள் மாயம் - பாடகர் மனோவின் மனைவி பேட்டியால் திடீர் திருப்பம்

x

பாடகர் மனோவின் மகன்கள் மீதான சர்ச்சை விவகாரத்தில், மனோவின் மனைவி செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்...

ஹோட்டலுக்கு உணவருந்த வந்த இரு மாணவர்களை, பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் தாக்கியதாக போலீசில் புகாரளிக்கப்பட்டதும், இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது..

இந்நிலையில், அனைத்தையும் திட்டவட்டமாக மறுக்கும் மனோவின் மனைவி ஜமிலா, சம்பவத்தன்று இதுதான் நடந்தது என விளக்கமளித்திருக்கிறார்..

சம்பவத்தன்று இரவே தன் மகன்கள் போலீசில் புகாரளிக்கலாம் எனக்கூறியதாகவும், நானும் ஒரு தாய் என்ற நிலையில், அந்த இரு சிறுவர்களின் நலனை கருதி தடுத்ததாகவும் கூறியிருக்கிறார்..

நடந்த தாக்குதலில் நானும் காயமடைந்த நிலையில், இரவு முழுவதும் சுய நினைவை இழந்து தூங்கியதாகவும், காலையில் மகன்கள் இருவரும் காணாததை அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்..

கூடவே, சம்பவத்தன்று தன் மகன்கள் மதுபோதையில் இருந்ததாக கூறுவது முற்றிலும் தவறு எனவும், போலீசையே தாங்கள்தான் அழைத்ததாகவும் கூறுகிறார்..

பாடகர் மனோவின் மனைவியுடைய இந்த குற்றச்சாட்டும், விளக்கமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மனோவின் மகன்கள் இருவரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்