சென்னை மணப்பாக்கத்தில் வரப்போகும் மாற்றம்... விறுவிறுப்பாக நடக்கும் பணிகள்
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றை தூர் வாரி அகலபடுத்தி, நடைபயிற்சி பாதை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் திட்டமிட்டபடி பணிகள் நடை பெற்றதை தெரிவித்து வீடியோ பதிவு மூலம் விளக்கமளித்தனர். இந்த பணிகள் நீர்வளத்துறை மூலம் 24.8 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய பகுதிகள் மழைநீர் தேங்காமல் வெளியேறியதாக தெரிவித்தனர்.
Next Story