"சென்னையில் மாமூல் வேட்டையா?" - அதிகாரிகள் சிறைபிடிப்பு... திடீர் பரபரப்பு
சென்னை மதுரவாயல் எம்.எம்.டி ஏ பிரதான சாலையில் மளிகை கடை, பேக்கரி, மெக்கானிக் ஷாப் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு இன்று ஆய்வுக்கு வந்த வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் குப்பை தொட்டிகள் வெளியே வைப்பது, காய்கறி முட்டையை வெளியே அடுக்குவது, வாகனங்களை சாலை வரும் நிறுத்துவது உள்ளிட்ட காரணங்களை கூறி அபராதம் விதித்தனர். அதிகாரிகள் கூறிய அனைத்தும் கடையின் வளாகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்குள்தான் இருக்கின்றன என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து வணிக ரீதியான அபராதம் எனக்கூறி ரூபாய் 2000 முதல் ரூபாய் 5000 வரை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றியா அதிகாரிகள் தங்கள் தரப்பிலிருந்து அடையாள அட்டை எதையும் காண்பிக்கவில்லை எனக் கூறி வியாபாரிகள் வாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.