கண்முன்னே காணாமல் போன தன் நிலம்..? - சென்னை அருகே இடத்தின் உரிமையாளர் தலையில் பேரிடி

x

நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் கொண்டு பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர் பாஸ்கர், சார்பதிவாளர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்