குப்பையில் கிடந்த iPhone; 1 பவுன் செயின் - தேடிப்பிடித்து உரியவரிடம் ஒப்படைத்த `தூய' பணியாளர்கள்
குப்பையில் கிடந்த காஸ்ட்லி iPhone; 1 பவுன் செயின் - தேடிப்பிடித்து உரியவரிடம் ஒப்படைத்த `தூய' பணியாளர்கள்
சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள பொன்னப்பன் கிராஸ் தெருவில் பணிபுரியும் தூய்மை பணியாளர் சின்னம்மாள் என்பவர் குப்பையில் கிடந்த 1 லட்சம் மதிப்புள்ள ஐபோனை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் தனது அதிகாரியிடம் தெரிவித்தார். ஐபோன் மொபைல் நம்பர் மூலம் அதன் உரிமையாளரான நீலா மணிகண்டனை கண்டுபிடித்து ஐபோன் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் 8 கிராம் எடை கொண்ட 70 ஆயிரம் ரூபாய் தங்க செயினை குப்பையிலிருந்து மீட்ட இருதயமரி என்ற தூய்மை பணியாளர் அதனை
தன் அதிகாரியிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த தங்க சங்கிலி KK நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட 2 தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Next Story