சென்னையில் மனைவியிடம் வீடியோ கால் பேசி முடித்த அடுத்த நொடி பிரிந்த கணவன் உயிர்

x

சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ். எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர், நந்தினி என்பவரை 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், மனைவியை பலமுறை செல்போனில் அழைத்து சதீஷ் சமாதானம் பேசியதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, சம்பவத்தன்று மனைவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய சதீஷ், கால் இணைப்பை துண்டித்த அடுத்த கணமே தூக்ககிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சதீஷ் ஆன்லைன் கேம் விளையாடியதாகவும், இதனால் அவர் இழந்த 14 லட்ச ரூபாய் பணத்தை தான் செலுத்தியதாகவும் கூறிய சதீஷின் தந்தை... குடும்ப தகராறில் தன் மகனை நந்தினியின் தந்தை பீர் பாட்டிலால் தாக்கியதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்