மூச்சு முட்டியே துடிதுடித்து இறந்த 10 மாத குழந்தை..சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai
அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரின் மனைவி காயத்ரி, தனது 10 மாத பெண் குழந்தை கிருபா ஸ்ரீக்கு, நேற்றிரவு பால் கொடுத்து தூங்க வைத்துள்ளார். திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை பிறந்தபோது சிக்கன்குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன்பேரில் குழந்தை மீண்டு வந்தது. சமீபத்தில் மீண்டும் குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப்பின், சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story