டீ குடிக்க சென்று அப்படியே ஓடிய மே.வங்க வாலிபர்.. சிசிடிவியை பார்த்து அதிர்ந்த ஓனர்

x

சென்னையில் ஒரு தங்க நகைப்‌ பட்டறையில் இருந்து 20 சவரன் நகைகளை திருடி சென்ற மேற்கு வங்க வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் அருண்குமார் எனவர் நடத்தி வரும் நகை பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சைபுல் ரஹ்மான் என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு டீ குடிக்க வெளியே சென்ற சைபுல் ரஹ்மான் 10 மணி ஆகியும் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த பட்டறை உரிமையாளர் அருண் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார் ‌. அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகத்தின் பேரில் பட்டறையில் இருந்து தங்க நகைகளை ஆய்வு செய்த போது சுமார் 20 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது. கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சைபுல் பட்டறையில் இருந்து நகைகளை திருடிச் சென்றது உறுதியானது.. இதனை அடுத்து பட்டறை உரிமையாளர் அருண் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து. நகைகளுடன் தப்பிச் சென்ற சைபுல் ரஹ்மானை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்