தெற்காசியாவிலேயே முதன் முறையாக..! ..காத்திருந்த ரசிகர்கள்..கடைசி வரை திக் திக்..ஃபார்முலா-4 கார் பந்தயத்தில் நடந்தது என்ன? - புதிய வரலாற்றின் முதல் அடி
தெற்காசியாவிலேயே முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயம் சென்னையில் தொடங்கி உள்ளது. இது குறித்து ஒரு செய்தித் தொகுப்பு....தமிழ்நாட்டில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.இதற்கு சான்றாக ஃபார்முலா-4 கார் பந்தயம் சென்னையில் தொடங்கி உள்ளது. ஆம்..... தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா-4 மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல் நாளான நேற்று,, பந்தயம் நடத்துவதற்கான வழித்தடத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சர்வதேச மோட்டார் கூட்டமைப்பு ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க கால தாமதமானது.இதனால் பந்தயம் தொடங்கவும் தாமதம் ஏற்பட்டது. கார் பந்தயத்தைக் காண மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்திருந்த சூழலில், கால தாமதத்தைக் கடப்பதற்கு கார்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதனை மக்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
இதனிடையே, கார் பந்தயத்திற்கான சாலையில் அனைத்து தடுப்புகளையும் தாண்டி நாய் உள்ளே நுழைய பார்வையாளர்கள் உற்சாக கோஷமிட்டனர்.இறுதியில் எஃப்.ஐ.ஏ சான்று கிடைத்து நீண்டநேர காத்திருப்புக்குப் பின்னர் ஃபார்முலா-4 கார் பந்தயம் தொடங்கியது.பந்தயத்தில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக நேற்றைய தினம் பயிற்சி போட்டிகள் மட்டுமே நடைபெற்றன. பயிற்சி சுற்றில் கார்கள் சீறிப்பாய்ந்தன...2 நாட்கள் பந்தயத்திற்காக சுமார் மூன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலையில் பந்தய தடம் அமைக்கப்பட்டுள்ளது.....இரண்டாவது நாளான, இன்று ஃபார்முலா 4 மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் தகுதிச்சுற்று, பிரதான போட்டிகள் நடைபெற்று அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.மழை, நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகள் என பல்வேறு தடைகளைத் தாண்டி தொடங்கியுள்ள ஃபார்முலா-4 கார் பந்தயம், வெற்றிகரமாக முடிந்து, தமிழ்நாட்டின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு மாணிக்கத்தைப் பதிக்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு...தந்தி டிவி செய்திகளுக்காக செய்தியாளர் சமயமணிவண்ணன், ரமேஷ் உள்ளிட்டோருடன் ஒளிப்பதிவாளர்கள் பாலாஜி மற்றும் மகேஷ்....