இந்த ரூட்ல போகாதீங்க மக்களே.. சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

x

ஃபார்முலா 4 பந்தயம் 30-ம் தேதி முதல் 1-ம் தேதி

வரை சென்னை தீவு திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது.

மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பந்தயம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வாகனங்கள் காமராஜர்சாலையில்

போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல், ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்

காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

சென்ட்ரலில் இருந்து, அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம் என்றும்,

பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள், நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்