"இது பச்ச கறி...உள்ள அப்படியே ரத்த கலர்...உலக பேமஸ் ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனா?"
"இது பச்ச கறி...உள்ள அப்படியே ரத்த கலர்...உலக பேமஸ் ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கனா?"- அதிர்ச்சியில் சென்னை மக்கள்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல துரித உணவகத்தில் வழங்கப்பட்ட ஃப்ரைடு சிக்கனில் துர்நாற்றம் வீசியதாக கூறி ஊழியர்களிடம் வாடிக்கையாளர் கொந்தளித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பிரபல உணவகத்தில், பெருமாட்டுநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் 929 ரூபாய்க்கு ஃபிரைடு சிக்கன் மற்றும் சிக்கன் பர்கரை பார்சல் வாங்கி சென்றுள்ளார். குடும்பத்துடன் சாப்பிடும் போது, சிக்கன் வேகாமல் துர்நாற்றம் வீசியதால், ஆவேசமடைந்த அவர், உணவகத்திற்கு பார்சலை எடுத்து வந்து ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Next Story