சென்னைக்கு அடுத்த அலர்ட்! ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட முக்கிய ஏரிகள் - மக்களே உஷார்!

x

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி 90 சதவீதம் நிரம்பி கடல் போல் காட்சி அளித்து வரும் நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறப்படுகிறது. அதன் ரம்மியமான ட்ரோன் காட்சியைப் பார்க்கலாம்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்வதால் உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. ஏரி முழு கொள்ளளவை நெருங்கிய நிலையில், உபரிநீர் திறக்கப்பட்டது. மழை நின்றாலும் ஸ்ரீபெரும்புதூர், நேமம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வந்தவாறு உள்ளது. இதனால் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 22.70 அடி அடியை எட்டியிருக்கும் நிலையில், மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இப்போது பல்வேறு ஏரிகள் நிரம்பியதாலும், மழை நீர் வரும் என்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் 21 அடிக்கு நீர்மட்டத்தை வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுப்பதற்காக மழை விட்ட பிறகு ஏரியில் இருந்து அதிக அளவு உபரிநீர் திறந்து விடப்பட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரியில் 21 அடிக்கு நீர்மட்டத்தை வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னையில் மழை வெள்ளத்தால் 5 தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் கடும் அவதிப்பட்டனர். செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதாலும், பூந்தமல்லியில் உள்ள பாரிவாக்கம் ஏரி, அம்பத்தூரில் உள்ள அயப்பாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மதுரவாயல், அடையாளம்பட்டு, நொளம்பூர், பாடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 5 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த வழிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, போலீஸாரால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் வரை சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்