சென்னையில் வெள்ள நீரில் தத்தளிக்கும் குடியிருப்புகள்

x

சென்னை, பள்ளிக்கரணை காமகோட்டி நகர், காமாட்சி நகர் பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அருகே உள்ள சாய் பாலாஜி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றும்

பணிகளும், மழை நீர் வடிகால் கால்வாய்கள் ஒருங்கிணைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால், வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்தாண்டை காட்டிலும் தற்போது வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டிருப்பதால், மேடான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விடுவதாகவும், சதுப்பு

நிலத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டும் வெள்ளநீர் தேங்கக் கூடிய சூழல் தொடர்வதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்