சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பைக் - பரபரப்பு காட்சிகள்

x

சென்னை அம்பத்தூரில், சாலையில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அம்பத்தூர் அருகே, மேனாம்பேடு பகுதியில் இருந்து கொரட்டூர் பகுதிக்கு செல்லும் சாலையில், இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்தது. இதையடுத்து, சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தியபோது இருசக்கர வாகனம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவர்கள் மற்றும் ​பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்