காலில் பட்ட சகதியால் உயிரே போச்சா? சென்னைக்கு படிக்க வந்த இளைஞர் பிணத்தை கண்டு கதறும் மாணவர்கள்
காலில் பட்ட சகதியால் உயிரே போச்சா? சென்னைக்கு படிக்க வந்த இளைஞர் பிணத்தை கண்டு கதறும் மாணவர்கள்
செம்மஞ்சேரி அருகே காலில் பட்ட சகதியை கழுவ சென்ற போது குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சோக சம்பவத்தின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான பொன் செய்யந்தான், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்து படித்து வந்த பொன் செய்யந்தான், வீட்டிற்கு மூத்தப் பிள்ளை..
பல்வேறு கனவுகளோடு சென்னையில் படித்து வந்த பொன் செய்யந்தானுக்கு மிஞ்சியதோ மரணம் தான்...
ஞாயிரன்று நண்பர்களுடன் வெளியில் சென்று சாப்பிட்டு விட்டு போது எதிரே வந்த வாகனம் வேகமாக சென்றதில் சாலையில் இருந்த சகதி அவர் மீது பட்டு, கால் முழுக்க சகதியானது...
அதனை சுத்தப்படுத்த செம்மஞ்சேரி அருகே பாண்டிச்சேரி பாட்டை சாலையில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தனது காலை அவர் சுத்தப்படுத்த குளத்திற்குள் சென்ற போது பாசியில் கால் பட்டு வழுக்கி குளத்தில் மூழ்கியுள்ளார்.
உடன் வந்த நண்பர்களுக்கும் பொன் செய்யந்தான் குளத்தில் விழுந்தது தெரியாததால், குளத்திற்குள் மூழ்கி துடிதுடிக்க உயிரிழந்துள்ளார் அந்த மாணவர்...
பின்னர், சிறுசேரி தீயணைப்பு படையினர் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், உயிரிழந்த மாணவனின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது...
உயிரிழந்த மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவருடன் பயின்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வருகை தந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மாணவனின் மரணத்தால் இடிந்து போயுள்ள குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நிற்க, இனி போன்ற நிலை யாருக்கும் ஏற்படாமல் இருக்க குளம், குட்டைகளை தூர்வாரி வைக்க வேண்டும் என சோகத்துடன் கோரிக்கை வைக்கின்றனர்.
மாணவரின் எதிர்பாரா மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமன்றி உடன் படித்த மாணவர்களையும் கலங்கச் செய்துள்ளது..