ஈபிஎஸ் வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

x

ஈபிஎஸ் வழக்கு.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தேவையில்லாத விஷயங்களை கூறியிருக்கிறார் எனவும் அது மேலும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் வாதிடப்பட்டது. பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மேத்யூ சாமுவேல் கருத்தை பெற்று தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்