"செத்த அப்றம் காசு தராதீங்க..வாழும்போது சரி பண்ணி தாங்க".. அம்மா இறந்த வேதனையில் மகன் ஆதங்கம்.. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை - சென்னையை உலுக்கிய சிறுவன் மரணம்

x

1 மாதத்திற்கும் மேலாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுவதாக சென்னை வடபழனி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்...அழகிரி நகர் பகுதியில் குடிக்கும் நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசி குடிப்பதற்கு பயனில்லாத முறையில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பே குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது... அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில் ஆட்கள் பற்றாகுறை இருப்பதாகக் கூறி முடிந்தளவுக்கு குழாயில் உள்ள தண்ணீரை அடித்து வெளியேற்றுமாறு கூறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மாற்று வழிக்காக லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை எனவும் அனைத்து வீடுகளிலும் கழிவுநீர் அடைப்பு தினந்தோறும் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... சரும பிரச்சினை, வயிறு உபாதைகளால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்படுவதாக கவலை தெரிவித்தனர்... சமீபமாக கழிவு நீர் கலந்த நீரைப் பருகி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சென்னையில் அதே போன்று எழுந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்