சென்னயில் அதிர்ச்சி சம்பவம்... ரத்தம் சொட்ட சொட்ட பெண்மணிக்கு நடந்த ஆபரேஷன்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், பெண் ஒருவரின் வெட்டப்பட்ட கை மணிக்கட்டை எட்டு மணி நேரம் தொடர் அறுவை சிகிச்சை செய்து ஒன்றாக இணைத்து மருத்துவக் குழு சாதனை செய்துள்ளது.
vovt
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த 23 வயது இளைஞர், தனது தந்தையின் இறப்புக்கு தாய்தான் காரணம் எனக் கருதி, பெரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த தாயின் இரண்டு கை மணிக்கட்டுகளிலும் வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்ததில், அவரது இடது கை மணிக்கட்டு கிட்டத்தட்ட துண்டிக்கம்பட்டு நரம்புகள், ரத்த நாளங்கள் முழுமையாக வெட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த கை மணிக்கட்டை வெற்றிகரமாக ஒன்றாக இணைத்தனர். உடலில் மற்ற இடங்களில் ஏற்பட்ட வெட்டு காயங்களுக்கு தையல் போடப்பட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு அந்த பெண் மாற்றப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.