வலியால் அலறி துடித்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி

x

வலியால் அலறி துடித்த ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 23 பேர் அண்மையில் பூந்தமல்லி கிளை சிறையில் இருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்

கொலை வழக்கில் 16ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள செல்வராஜ் என்பவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வலி ஏற்பட்டதால்

சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்றிரவு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்