சென்னையை உலுக்கிய ஆணவக்கொலை.. வழக்கறிஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்கள்
பள்ளிக்கரணை பிரவீன் ஆணவக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அவருடைய வழக்கறிஞர் மோகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் ஷர்மிளா என்ற மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த பிரவீன் என்பவர் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதற்கிடையே அவருடைய மனைவி ஷர்மிளாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பிரவீனின் வழக்கறிஞர் மோகன், வழக்கில் உண்மை குற்றவாளியான பெண்ணின் தந்தை துரைக்கண்ணு திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை எனவும், வழக்கின் விசாரணை முறையாக நடத்தப்படாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். எனவே, வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் வழக்கறிஞர் மோகன் வலியுறுத்தி உள்ளார்.
Next Story