சின்ன பிரச்சனைக்கு கொடூர கொலை... சென்னையில் துடிதுடித்து நின்ற ஆட்டோ ஓட்டுநர் மூச்சு
சென்னை அமைந்தகரையில் வீட்டு வாசலில் தண்ணீர் சேர்வதால் நடந்த மோதலில் ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்டார். ராஜகோபாலன் தெருவில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் தமீம் அன்சாரிக்கும், எதிர்வீட்டில் வசித்து வரும் மருந்து விநியோக முகவர் முகமது உஸ்தான் என்பவருக்கும் வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிய தண்ணீரை ஊற்றுவது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இரு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, தமீம் அன்சாரியின் மகன்கள் முகமது உஸ்தானை தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து முகமது உஸ்தான் தமீம் அன்சாரியின் கழுத்தில் கத்தியால் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்து, உயிரிழந்தார். இதையடுத்து, அமைந்தகரை காவல் நிலையத்தில் சரணடைந்த முகமது உஸ்மானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story