மனவளர்ச்சி குன்றிய மாணவியை விடுதியில் வைத்து கூட்டு பாலியல் செய்த கும்பல்-வாக்குமூலத்தால் அதிர்ச்சி

x

சென்னையில் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்தார்.

சென்னையைச் சேர்ந்த அந்த மாணவியை பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை எழும்பூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அவரை பெரியமேடு, வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில் திருவள்ளுரை சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷ், நரேஷ், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், மணி, அஜித் குமார் ஆகிய 5 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்னாப் சாட் செயலி மூலம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, மகிளா நீதிமன்ற நீதிபதியிடம் தனி அறையில் வாக்குமூலம் அளித்தார்.

மேலும் மாணவிக்கும், கைது செய்யப்பட்ட நரேஷ் மற்றும் சுரேஷிற்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வழக்கில் தலைமறைவான நபர்களை பிடிக்க பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ள நிலையில், மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணையில் இறங்க உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்