நவீன கழிவுநீர் அகற்றும் வாகனம் - முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில், தேனாம்பேட்டையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து இயந்திரம் குறித்த விவரங்களை தூய்மைப் பணியாளர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களிடம் உங்களுக்கு பணி எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய இடைவெளியில் பணிகள் ஒதுக்கப்படுவதாகவும், பொதுமக்களின் புகார்கள் அடிப்படையில் அலுவலர்களால் பணிகள் ஒதுக்கப்படுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.