சென்னையில் முதல்வர் வீட்டின் அருகே உள்ள செல்போன் கடையில் தீ விபத்து

x

சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் முதல்வரின் வீட்டிற்கு அருகே உள்ள செல்போன் கடையில் நேர்ந்த தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் வீட்டிற்கு அருகே உள்ள ஆழ்வார்பேட்டை தெரு பகுதியில் இரண்டு தளங்களை கொண்ட வணிக கட்டிடம் உள்ளது. தரைத்தளத்தில் உள்ள செல்போன் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்ட கடையின் உரிமையாளர் தீயணைப்பானைக்கொண்டு தீயை அணைத்தார். இதனால், மற்ற கடைகளுக்கு தீயானது பரவாமல் தடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்