நடிகர் சங்கத்தில் சத்தமின்றி சம்பவம் செய்த விஜய்.. ரஜினி, கமலே செய்யாத ஒன்று

x

கேரளாவின் ஹேமா குழு அறிக்கை ஏற்படுத்திய அதிர்வலைகளுக்கு இடையே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68 ஆவது பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது...

சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஏராளமான திரை கலைஞர்கள் கலந்து கொண்ட நிலையில், சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் கூட்டத்திற்கு சைக்கிளில் என்ட்ரி கொடுத்தார்...

ஹேமா கமிட்டி போல், தமிழ் திரையுலகிலும் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என ஹேமா அறிக்கை வெளியானதில் இருந்தே குரல்கள் எழுந்து கொண்டிருந்த நிலையில், கூட்டத்திலும் இது தொடர்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது..

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை திரைத்துறையில் பணியாாற்றத் தடை என எச்சரிக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி யூடியூபில் அவதூறாக பதிவிடப்படுவதால்... பாதிக்கப்படுபவர்கள், சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தால் கமிட்டி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க கட்டடம், சங்கத்தின் கடன் பிரச்சினை, பெண் நடிகைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் என அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்...

கூட்டத்தில் பேசிய சங்க பொருளாளர் நடிகர் கார்த்திக், சங்கம் கடனில் இருப்பதால் அதனை சரிசெய்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருப்பதாகவும், இதில் மூத்த நடிகர்கள் கமலஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்க உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்..

தொடர்ந்து, நடிகர் விஜய் கடனாக இல்லாமல், நிதியாக ஒரு கோடி ரூபாய் பணத்தை நடிகர் சங்கத்திற்கு வழங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

நடிகர் சங்க கட்டடம், சங்கத்தின் கடன் பிரச்சினை, பெண் நடிகைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் என அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக திரையுலகினர் தெரிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்