வட்டாட்சியருடன் பொதுமக்கள் வாக்குவாதம்... சென்னையில் பரபரப்பு | Chennai | Thanthi TV
சென்னை அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க 52 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்தப் பகுதியை பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலத்தை அளவீடு செய்ய வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற நிலையில், அந்தப் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு செல்ல சாலையில் இரண்டடி கூடுதலாக விட்டு கல் போட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story