`எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்த பெற்றோருக்கு பேரிடி'-9 மாத குழந்தை உயிரை பறித்த மர்மம்...

x

சென்னை போருர் அருகே ஆலப்பாக்கம் பிரதான சாலையில் வசித்து வருபவர் அருண்பிரசாத்.இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன், பிறந்து 9 மாதமே ஆன இரண்டாவது மகன் அகிலனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகே உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.பின்னர் காய்ச்சல் குறையாததால் மீண்டும் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு உடல் நிலை முன்னேற்றம் அடையாததால் மீண்டும் போருரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது குழந்தை உயிர் இழந்தது. இது குறித்து தகவல் அறிந்த மதுரவாயல் காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 9 மாத குழந்தை, மர்ம காய்ச்சல் காரணமாக,உயிர் இழந்த சம்பவம் சோகத்தை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்