பனிமூட்டத்துடன் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை - சென்னையில் வாகன நெரிசல்
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. விட்டு விட்டு பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. மேலும், கடும் பனிமூட்டம் நிலவியதால், வாகனங்கள் பகலிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
Next Story