`தொட்டாலே காலி'... சென்னையை உலுக்கிய `சப்ஸ்டன்ஸ்' ... போலீசாரை திடுக்கிட வைத்த கேங்
`தொட்டாலே காலி'... சென்னையை உலுக்கிய `சப்ஸ்டன்ஸ்' ... போலீசாரை திடுக்கிட வைத்த கேங்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மொய்தீன் என்பவரது வீட்டில் போதை மாத்திரைகள் வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் போதை மாத்திரைகள் சிக்கின. விசாரணைக்கு பிறகு குன்றத்தூரை சேர்ந்த வெங்கடேசன் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், 3,700 போதை மாத்திரைகள், பட்டாகத்திகளை பறிமுதல் செய்தனர். மொய்தினிடம் விசாரணை செய்ததில் மும்பையில் இருந்து வண்ணாரப்பேட்டை பகுதிக்கு போதை மாத்திரைகளை கொண்டு வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story