வாகனஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் வரப்போகும் புது மாற்றம்... மாநகராட்சி அதிரடி
சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்புகளை அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. கனமழை காலங்களில் சென்னையில் உள்ள 17 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மழைநீர் அளவு உயர்வதை தானாக கண்டறிய ஒரு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலி மூலம் போலீசாருக்கு அறிவுறுத்துவதோடு, போக்குவரத்து தடை செய்யப்படும். முதற்கட்டமாக சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தடுப்புகளை அமைக்கப்பட்டுள்ளது.
Next Story