விமான பயணிகளுக்கு குட் நியூஸ் - "இனிமே காத்திருக்க வேண்டாம்"
- சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தின் முனையம் 4 -லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு தற்போது பாஸ்ட் ட்ராக் எனப்படும் self package drop என்ற புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
- இதனால் பயணிகள், தங்களுடைய உடைமைகளை தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்து பரிசோதித்து, கன்வேயர் பெல்ட் மூலம், விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி முனையம் 4ல், 8 பாதுகாப்பு சோதனை தானியங்கி கவுன்ட்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்பாடுகளால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதில்லை என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அதிநவீன திட்டம் ஏற்கனவே சென்னை உள்நாட்டு விமான நிலையம் முனையம் 1 புறப்பாடு பகுதியில், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளுக்கு, கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியில் இருந்து அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story