135 வழக்குகள்.. நாடே வெறிகொண்டு தேடியவரை அண்ணாநகரில் தூக்கிய சென்னை போலீஸ்

x

சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மேரி ஜெனட் டெய்சி என்பவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மும்பை இணையவழி குற்ற பிரிவில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உங்கள் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்ப்பதாகவும், அதிலிருக்கும் பணத்தை மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றுமாறும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய டெய்சி அந்த மர்ம நபர் தெரிவித்த கணக்குக்கு ரூபாய் 38 லட்சத்தை மாற்றி உள்ளார். தொடர்ந்து, அந்த நபர் தொடர்பு கொள்ளாததால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார் சென்னை, அண்ணாநகர் பொன்னி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிஜாய் என்ற இளைஞரை கைது செய்தனர். அவர் 13 வங்கி கணக்குகளை தொடங்கி சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் என கூறி பொதுமக்களிடம் இருந்து பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளதும், இவருக்கு நாடு முழுவதும் 135 மோசடி வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்