"ஒரு நாளைக்கு 10 பூனை டார்கெட்..!" ஒரு பூனைக்கு இவ்வளவு ரேட்டா..? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் பூனைகளைக் குறிவைத்து கடத்தும் கும்பல்களால் உரிமையாளர்கள் பீதியடைந்துள்ளனர்... சென்னை விருகம்பாக்கம் இந்திரா நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த பரிதா பானு வளர்த்த புஜ்ஜிமா என்ற செல்லப் பெயர் கொண்ட பூனை, இவரது வீட்டின் அருகிலேயே மேலும் 2 பூனைகள் என மொத்தம் 3 பூனைகள் அதே தெருவில் காணாமல் போயுள்ளன. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது தான் சிலர் பூனைகளைல் கடத்தி பைகளில் போட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து பரிதா பானு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பூனைகளால் தொந்தரவு என குடியிருப்புவாசிகள் குறைகூறுவதால் ஆட்களை வைத்து பூனைகள் கடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்