தெரிந்த உண்மை.. சென்னையில் காதலியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற EX காதலன் - அதிர்ச்சி வீடியோ
சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய பரத் என்பவர், அந்த பெண்ணிடம் சுமார் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. பள்ளி சிறுமிகளோடு ஆபாச சாட்டிங் செய்த இன்ஸ்டா சேட்டிங் ஆதாரங்களுடன் ஆவடி காவல் ஆணையரிடம் புகார் அளித்ததின் அடிப்படையில், பரத் மீது வன்கொடுமை கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர், இந்த வழக்குகளில் பரத் கைது செய்யப்படாத நிலையில், தன் மீது அவர் கார் ஏற்றி கொல்ல முயன்றதாக அந்த பெண் கோயம்பேடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் சென்ற தனது சகோதரன் மீதும் கார் ஏற்றி கொல்ல முயன்றதாக சிசிடிவி காட்சி ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இது தொடர்பாக சிஎம்பி டி காவல் நிலையத்தில் பரத் மற்றும் சகோதரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story