சென்னை புத்தக கண்காட்சி... அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் இந்த அரங்கு

x

சென்னை புத்தக கண்காட்சி... அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் இந்த அரங்கு

சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள திருநங்கைகளின் புத்தக அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

திருநங்கைகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ள திருநங்கைகள் புத்தக அரங்கு வாசிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 48வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று விடுறை தினம் என்பதால், ஏராளமானவர்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக, அரங்கு எண் 208 ல் திருநங்கைகள் பதிப்பகம் வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. திருநங்கைகள் சமூகத்தில் நாள்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள் குறித்தான பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவை திருநங்கை பதிப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருநங்கைள் எதிர்கொள்ளும் வாழ்வியல், உரிமையியல் பிரச்னைகள் குறித்து இந்த புத்தகங்களின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என அரங்கம் அமைத்துள்ள திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்