பிரபல ஹோட்டலில் பிரியாணியில் நெளிந்த புழு - `சாம்பிள்’ எடுத்து சென்ற உணவு பாதுகாப்புத்துறை..

x

சென்னையில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணியின் கிளை, மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவில் உள்ளது. இந்த கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் சத்ய பிரகாஷ் மற்றும் நிபி நெல்சன் ஆகிய இருவரும் சிக்கன் பிரியாணி மற்றும் கிரில் சிக்கனை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அவர்களின் உணவில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மற்ற வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் தக்க ஆதாரத்துடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் மற்றும் அசோக் நகர் போலீசார், பிரியாணி கடைக்கு வந்து சுமார் 3 மணி நேரம் சமையல் அறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து, புழு இருந்ததாக கூறப்பட்ட உணவை சீலிட்டு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் பிரியாணி கடையை தற்காலிகமாக மூடி, கடையை சுத்தம் செய்த பிறகே திறக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்துச் சென்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்