காதலியின் நினைவாக வெளியிட்ட வீடியோ.. - காவல் நிலையத்தில் மன்னிப்பு கேட்ட இளைஞர்..
சென்னை அண்ணாநகரில், இளைஞர் ஒருவர் காதலியுடன் பைக் வீலிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 2 ஆண்டுகளுக்கு முன் ஃபாலோயர் ஒருவர் கேட்டதற்கு இணங்க காதலியுடன் பைக் சாகசம் செய்ததாகவும், தற்போது காதலி பிரிந்து சென்றதால், அவரது நினைவாக வீடியோவை பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, போலீசாரின் அறிவுறுத்தலின்படி, இதுபோன்று யாரும் பைக் சாகசத்தில் ஈடுபட வேண்டாமென இளைஞர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story