சென்னை கடலில் 85 அடியில் கிடைத்த கார்.. உடல் இருந்த இடம் தான் அதிர்ச்சியின் உச்சம் -கதறிய உறவினர்கள்

x

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் முகமது ஷாகி. துறைமுகத்தில் கடலோர காவல் படையில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஜொகேந்திர காண்டாவை அழைத்துவர ஜவகர் டக் 5 என்ற இடத்திற்கு சென்றார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த‌து. கடற்படை அதிகாரி தப்பித்த நிலையில், முகமது ஷாகி மாயமானார். கடலோர காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் 85 அடி ஆழத்தில் இருந்து காரை மீட்டனர். ஆனால், மாயமான முகமது ஷாகியை கண்டுபிடிக்க முடியாத‌தால் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திலிருந்து 100மீ தொலைவில் கார் ஓட்டுனர் சகியின் உடல் ஒதுங்கியது. உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.


Next Story

மேலும் செய்திகள்