பார்கவுன்சிலில் பதிவு செய்த இளைஞர் மீது பாய்ந்த வழக்கு.!

x

கண்ணகி நகரை சேர்ந்த 22 வயது இளைஞர் சந்தோஷ்குமார், சட்டப்படிப்பை முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக அவரது நண்பர்கள், மாநகராட்சியின் அனுமதியின்றி 9 இடங்களில் பேனர் வைத்தனர். மேலும் குதிரை வண்டியில் சந்தோஷ்குமாரை ஊர்வலமாக அழைத்து சென்றனர். அதிக சத்தமாக பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்